News August 9, 2024

வாக்களிப்பதை கட்டாயமாக்க திட்டமா?

image

நாட்டில் வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லையென, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தேர்தலுக்கு முன்னதாக கட்சிகள் இலவசங்களை விநியோகிப்பதைக் கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை என்றார். மேலும், மக்களவைத்தேர்தலில் 65.79% வாக்குகள் பதிவானதாகவும் குறிப்பிட்டார்.

Similar News

News October 14, 2025

இந்தியா, PM மோடியை புகழ்ந்த டிரம்ப்!

image

இந்தியா சிறந்த நாடு, PM மோடி எனது சிறந்த நண்பர் என காஸா அமைதி உச்சி மாநாட்டில் டிரம்ப் புகழாரம் சூட்டினார். மேலும், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் இருவரும் நன்றாக வாழப்போகிறார்கள் என தான் நினைப்பதாகவும், தன்னை பொறுத்தவரை இருநாட்டு தலைவர்களும் சிறந்தவர்கள் என பாக்., PM ஷெபாஸ் ஷெரிப்பையும் புகழ்ந்தார். டிரம்ப்பின் பாக்., ஆதரவு பேச்சுக்கு ஆதரவு & எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உங்கள் கருத்து என்ன?

News October 14, 2025

மூலிகை: வெற்றிலையின் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, வெற்றிலையை மெல்லுவதால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவை நீங்கும் *படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தி அதிகரிக்கும் *அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும் *கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். SHARE IT.

News October 14, 2025

சினிமாவில் நன்றி இல்லாமல் போய்விட்டது: பேரரசு

image

படம் முடிந்தால் போதும் சில நடிகைகள் யாரையும் மதிப்பது கிடையாது என இயக்குநர் பேரரசு வேதனையுடன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய அவர், சினிமாவில் நன்றி என்பதே இல்லாமல் போய்விட்டது என்றார். படம் முடிந்த பிறகு ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் முக்கிய நடிகர்கள் வருவதில்லை என்ற பேச்சு எழுந்தது. குறிப்பாக அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் மீது பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

error: Content is protected !!