News September 27, 2025
மாசம் ₹210 முதலீட்டில் ₹5,000 பென்ஷன் தரும் திட்டம்!

மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் மாதம் ₹42-யை முதலீடு செய்தால், 60 வயதுக்கு பின் மாதம் ₹1,000 கிடைக்கும். மாதம் ₹210 முதலீடு செய்தால், மாதம் ₹5,000 கிடைக்கும். 18- 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்தது 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். இதனை நண்பர்களுக்கு பகிருங்கள்.
Similar News
News January 8, 2026
சென்சார் விவகாரம்.. விஜய் மௌனியாக இருப்பது ஏன்?

சென்சார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஜனநாயகனே (விஜய்) வாய்மூடி மௌனியாக இருப்பதாக CPM பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். சென்சார் போர்டை குறை சொன்னால் மத்திய அரசை குறை சொன்னதாக ஆகி விடுமோ என்ற அச்சத்தில் படம் வெளியாவது தள்ளி போனாலும் பரவாயில்லை; தன்னை பாதுகாத்துக் கொண்டால் போதும் என எதுவும் சொல்லாமல் இருக்கிறார்; அப்படி இருக்கையில் மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன ஆகப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 8, 2026
BREAKING: மீண்டும் புயல்.. நாளை பேய் மழை வெளுக்கும்

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என IMD தெரிவித்துள்ளது. 15 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் உருவானால் 2026-ன் முதல் புயலாக இது இருக்கும். இதன் தாக்கத்தால் இன்று நள்ளிரவில் மழையும், நாளை கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News January 8, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிர்ச்சியை கொடுக்கின்றன. 2021-ல் சிவகாசியில் 14 வயதான பள்ளி மாணவியை சித்தப்பா முறை கொண்டவரே கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது, இந்த வழக்கில் குற்றவாளிக்கு 82 ஆண்டுகள் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பள்ளிப் பையை சுமக்க வேண்டிய சிறுமி குழந்தையை சுமப்பதை என்ன சொல்வது?


