News May 18, 2024
மகளுடன் ரோஹித் ஷர்மா எடுத்த புகைப்படம் வைரல்

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணி வீரர் ரோஹித் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். மேலும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார். இதனிடையே தனது மகள் சமைராவுடன் சேர்ந்து அவர் எடுத்த புகைப்படம் வைரலாகிறது. அதை பார்த்த பலரும் 2 பேரையும், பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News April 7, 2026
காங்., வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு

விளவங்கோடு தொகுதியின் காங்., வேட்பாளர் டி.டி.பிரவீனுக்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். TN, கேரளாவில் வாக்குரிமை வைத்திருப்பதாக வாதிட்டு, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதேநேரம், மேலூர் தொகுதியின் காங்., வேட்பாளர் விஸ்வநாதனுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
News April 7, 2026
மரண தண்டனைக்கு எதிரானவன்: கமல்

தனிப்பட்ட முறையில் தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என கமல் பதிவிட்டுள்ளார். சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், கொடுங்குற்றம் இழைத்தவர்கள் சலுகைகள் இன்றி ஆயுள் உள்ளவரை சிறை வைக்கப்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துவிட்டனரே என்று குறிப்பிட்டுள்ளார்.
News April 7, 2026
ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தம்

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரமாண பத்திரத்தில் வருமானம், சொத்து & நிறுவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக திமுகவினர் புகார் தெரிவித்ததால், அவரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழிசையின் கடும் எதிர்ப்பால், மயிலாப்பூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


