News March 13, 2025
ரேவந்த் ரெட்டிக்கு நேரில் அழைப்பு!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா Ex CM நவீன்பட்நாயக், ஆந்திர Ex CM ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா CM ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
Similar News
News March 13, 2025
விஜய் காரை மறித்த தவெகவினர்

சென்னை பனையூரில் விஜய்யின் காரை தவெகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.கே.மணியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள் காரை மறித்து விஜய்யிடம் மனு அளித்தனர். திருவொற்றியூர் பகுதியை தனி மாவட்டமாக பிரித்து அதற்கு செயலாளரை நியமிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நடு ரோட்டில் காரை நிறுத்திய விஜய், அவர்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்டார்.
News March 13, 2025
இலச்சினை மாற்றம் குறித்து அரசு விளக்கம்

நாளை தாக்கல் ஆகவிருக்கும் தமிழக அரசு பட்ஜெட் பற்றி இன்று வெளியான இலச்சினையில் ‘₹’ எழுத்துக்கு பதில் ‘ரூ’ பயன்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் தமிழக அரசு, 15 அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதல்வர் உபயோகித்து உள்ளதாகக் கூறியுள்ளது. இது தாய்மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் வகையில் இருப்பதாகவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
News March 13, 2025
உங்களின் நகங்கள் ‘இப்படி’ இருக்கா?

நகத்தின் கலரை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை சொல்லலாம். வெளிர் நகங்கள்: ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகையாக இருக்கலாம் *நடுவில் வெள்ளை கலர்: கல்லீரல் பிரச்சனையை குறிக்கிறது *கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயின் அறிகுறி *மஞ்சள் நிறம்: நகத்தில் பூஞ்சை தொற்று *வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது. ஆரோக்கியமான நகங்களின் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும்.