News February 9, 2025
தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்ட நபர்

பெங்களூருவில் ஆபிஸ் செல்ல ஓலா, ஊபர், ரேபிடோ கிடைக்காததால் ‘PORTER’ ஆப் மூலம் தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்ட இளைஞரின் செயல் சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை அள்ளுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெங்களூருவின் அவலத்தை இளைஞர் பதின் குகரே அம்பலப்படுத்தியுள்ளதாக ஒருசிலரும், ‘What an idea sirji’ என பாஸிட்டிவாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதைப் பற்றி உங்க கருத்து என்ன?
Similar News
News March 8, 2026
காங்கிரசுக்காக தமிழகத்தை அடமானம் வைத்த திமுக

கூட்டணிக்குள் காங்கிரஸை தக்க வைக்க திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். காங்., – திமுக தொகுதி உடன்பாடு கையெழுத்தான மறுநாளே விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில காங்., அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதனை CM ஸ்டாலின் ஏன் கண்டிக்கைவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 8, 2026
உலகப்போரையே நிறுத்திய பெண்கள்.. வரலாறு தெரியுமா?

புராணக் கதைகளால் போர் வெடிப்பதே பெண்களால்தான் என்ற தவறான புரிதல் சமூகத்தில் இருக்கிறது. ஆனால் உலகப்போரையே நிறுத்த பெண்கள் முக்கியப் பங்கு வகித்த வரலாற்றை பற்றி தெரியுமா? 8 மார்ச், 1917-ல் World War 1 போது பசி, பட்டினி, வறுமை இருந்தது. இதனை எதிர்த்து ஒன்று கூடிய பெண்கள் ‘Bread & Peace’ போராட்டத்தை ரஷ்யாவில் நடத்தினார்கள். 1918-ல் போர் நின்றதோடு, ரஷ்ய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
News March 8, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை(9.3.2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியின்படி மாற்றமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


