News May 7, 2025

காதல், ரொமான்ஸ் இல்லாத புது வகை கல்யாணம்!

image

லவ் மேரேஜ், அரேன்ஜ் மேரேஜ் எல்லாம் பழசு, இப்போ ‘Friendship Marriage’ தான் புதுசு என்பதைப் போல் சீனாவில் புதிய பழக்கம் டிரெண்டாகியுள்ளது. இந்த வகை மேரேஜை செய்யும் ஜோடிகள் திருமணம் மட்டுமே செய்யுமாம். படுக்கையையோ, படுக்கை அறையையோ பகிர மாட்டார்களாம். கல்யாணம் எப்போ என கேட்கும் உறவினர்களிடம் இருந்து தப்பிக்க காதல் இல்லாத இந்த வகை கல்யாணத்தை பலரும் விரும்புகின்றனராம். உங்கள் கருத்து என்ன?

Similar News

News November 26, 2025

இனி பெட்ரோல், டீசல் வேண்டாம்: அமைச்சர்

image

இந்தியாவில் காற்று மாசை குறைக்க பெட்ரோல், டீசலுக்கு பதிலாக பயோ எரிபொருள்களை உருவாக்கவேண்டும் என நிதின் கட்கரி கூறியுள்ளார். ஒரு நாட்டுக்கு பொருளாதாரமும், சுற்றுச்சூழலும் முக்கியம் என்ற அவர், இந்தியாவில் 40% காற்று மாசு வாகன புகையால் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார். எனவே, மாற்று எரிபொருளை உருவாக்கினால் பெட்ரோல் இறக்குமதி செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலையும் காக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

2026-ல் மெகா ட்ரீட்டுக்கு ரெடியாகும் சூர்யா!

image

‘கங்குவா’, ‘ரெட்ரோ’ போன்ற படங்கள் ஏமாற்றிய நிலையில், 2026-ல் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் கொடுக்க சூர்யா ரெடியாவதாக கூறப்படுகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் ‘கருப்பு’ படம் ஜனவரி 23-ம் தேதி வெளிவரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரியின் ’சூர்யா 47’ சம்மருக்கு வெளியாகும் என்றும் ‘ஆவேசம்’ ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரலாம் எனவும் பேசப்படுகிறது.

News November 26, 2025

செங்கோட்டையனுடன் திமுக அமைச்சர்.. திடீர் திருப்பம்

image

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செங்கோட்டையனை திமுக முக்கிய அமைச்சர் சற்றுமுன் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது திமுகவில் இணைய வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!