News May 14, 2024

புதிய வகை கொரோனா இந்தியாவுக்குள் புகுந்தது

image

FLiRT என்று சொல்லப்படக் கூடிய புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் அதிகம் பரவி வருகிறது. ஓமிக்ரான் வைரசின் துணை வகையான இந்த FLiRT, ஜனவரி மாதம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தானே, புனே, நாசிக் என பல நகரங்களில் 91 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை பதிவாகியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகம் பரவி வருகிறது.

Similar News

News April 9, 2026

கனிமொழி ஒரு செல்லாத காசு: EPS

image

கனிமொழி ஒரு செல்லாத காசு, திமுகவிலேயே அவருக்கு வேலையில்லை என EPS சாடியுள்ளார். ராயபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்த அவர், 2G வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மற்றவர்களை நம்பி ஏதாவது பேசி மீண்டும் திஹாருக்கு சென்றுவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில் EPS தரம் தாழ்ந்து பேசுவதாக <<19556166>>கனிமொழி <<>>கூறியதற்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

News April 9, 2026

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு

image

அனைத்து வகை அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏப்.17 முதல் கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி (திங்கள்கிழமை) அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT

News April 9, 2026

BREAKING: ஜன நாயகன் படம் இணையத்தில் லீக்கானது

image

ஜன நாயகன் படத்தின் காட்சிகள் ரிலீஸுக்கு முன்னரே லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனின் 5 நிமிட காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளன. அவை செல்போனில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது. ஏற்கெனவே சென்சார் பிரச்னையால் படம் ரிலீஸாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!