News June 15, 2024
இடைத் தேர்தலில் பாமகவுக்கு புது சின்னம்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து பின்னடைவைச் சந்தித்த நிலையில், மாம்பழச் சின்னம் பறிபோய் விட்டதால், இடைத் தேர்தலில் அந்த சின்னத்தில் பாமகவால் போட்டியிட முடியாது. எனவே தேர்தல் ஆணையத்திடம் வேறு புதிய சின்னத்தை பெற்றே இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலை பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
விவசாயிகளுக்கு இந்த அடையாள எண் அவசியம்!

ஆதார் கார்டு போல, அனைத்து விவசாயிகளும் ‘விவசாய அடையாள அட்டை’ வைத்திருக்க வேண்டும் என தமிழக விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், அரசின் மானியங்கள், பயிர்க் காப்பீடு & நேரடி நிதி உதவிகளை (DBT) ஊழலின்றி, நேரடியாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆதார் எண்ணை கொடுத்து, இந்த அடையாள எண்ணை பெற, <
News March 3, 2026
20 நாள்களில் கூடுதலாக ₹6,000 வழங்கிய தமிழக அரசு

நிதித் திட்டங்களில் பயன்பெறுவோருக்கு 20 நாள்களுக்குள் கூடுதலாக ₹6,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வழக்கம்போல் ₹1,000 உரிமைத் தொகையை எதிர்பார்த்த மகளிருக்கு பிப்.13 அன்று கூடுதலாக ₹4,000 சேர்த்து ₹5,000 வழங்கப்பட்டது. அதேபோல், இன்றைய தினம் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கைம்பெண் உதவித் தொகை பெறுவோருக்கு மேலும் ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
இந்தியாவில் X ஆபாச வீடியோ பார்க்க முடியாது

X தளத்தில் ஆபாச பதிவுகளை பதிவிட கட்டுப்பாடுகளை விதிக்க, சமீபத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இந்தியாவில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இனி X தளத்தில் இடம்பெறாது என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்தே ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் தடை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், வெளிநாடுகளுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


