News August 11, 2024
சோலார் மின் உற்பத்தியில் புதிய சாதனை

நெல்லை மின்வாரியம் சார்பில் இன்று (ஆக.11) வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2 இல் 5,704 மெகாவாட் மின் உற்பத்தி என்பது அதிகபட்ச சாதனையாக இருந்தது. இது கடந்த 9 ஆம் தேதி 5,979 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதன்மையாக இருப்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
Similar News
News March 4, 2026
திருநெல்வேலி வரும் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் இன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அடுத்த நிகழ்ச்சியை மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக வினர் தெரிவித்துள்ளனர்.
News March 4, 2026
நாங்குநேரி சம்பவம்; பொதுமக்கள் ஏன் உதவவில்லை? – விளக்கம்

நாங்குநேரியில் சாலையில் செல்பவர்களை அரிவாளால் வெட்டி கொடூர தாண்டவம் ஆடிய கும்பல் பைக்குகளில் மஞ்சங்குளத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் பெயரை(அவரது சமூகத்துடன்) சத்தமாக கூறி வாழ்க கோசமிட்டனர். அப்போது பைக்கில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். அவரை தூக்கி விட முயன்ற அப்பகுதி மக்களை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் உதவிக்கு வந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
News March 4, 2026
நாங்குநேரி சம்பவத்தில் வெட்டுப்பட்டவருக்கு 5 மணி நேர ஆபரேஷன்

நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கணேசன் என்பவர் உயிருக்கு போராடி வருகிறார். இவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். நெல்சனின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவருக்கு நேற்று 5 மணி நேரத்திற்கு மேல் ஆபரேஷன் நடந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


