News August 24, 2024
சிக்ஸர்களில் புதிய சாதனை

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக இன்று நடைபெற்ற T20 போட்டியில் WI வீரர் பூரண் புதிய சாதனை படைத்துள்ளார். SAக்கு எதிராக அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 65 ரன்கள் (2 ஃபோர், 7 சிக்ஸர்) குவித்தார். இதன் மூலம் T20யில் அதிக சிக்ஸர்கள் (139) அடித்த வீரர்கள் பட்டியலில் பட்லர் (137), SKY (136), மேக்ஸ்வெல் (134) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 3ஆம் இடம் பிடித்தார். இப்பட்டியலில் ரோஹித் (205) முதல் இடத்தில் உள்ளார்.
Similar News
News December 2, 2025
வாக்காளர்களை கவர திமுகவின் மாஸ்டர் பிளான்

2026 தேர்தலையொட்டி 3 மெகா திட்டங்களை அறிவிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இம்மாதமே 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். மகளிர் உரிமைத்தொகை கிடைக்க புதிதாக விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கிலும் ₹1000 செலுத்தப்படவுள்ளது. மேலும், பொங்கல் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பும் வெளியாகவுள்ளது.
News December 2, 2025
உலகின் நீளமான நதிகள் தெரியுமா?

நதிகள், மலைப்பகுதிகளில் தொடங்கி சமவெளிகளில் ஓடி கடலில் கலக்கின்றன. நதிகள் செல்லும் வழியெல்லாம், அந்த பகுதியை செழிப்படைய செய்கின்றன. குடிநீர், விவசாயம், பாசனம் மற்றும் மின்சாரம் தயாரித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றன. உலகின் சில நதிகள் நீண்ட தூரம் ஓடுகின்றன. அவை எந்தெந்த நதிகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 2, 2025
ஐபிஎல் ஏலம்: 1,355 வீரர்கள் பதிவு

2026 ஐபிஎல் சீசனுக்காக நடைபெறவுள்ள மினி ஏலத்தில் 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், ரவி பிஷ்னோய், ஜேமி ஸ்மித், வெங்கடேஷ் ஐயர், மதீஷா பதிரானா, கூப்பர் கானோலி உள்ளிட்டோர் தங்களது அடிப்படை ஏலத் தொகையாக ₹2 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். விரைவில் இறுதிப்பட்டியல் வெளியாகும் நிலையில், அபுதாபியில் டிச.15-ம் தேதி மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதில் CSK எந்த வீரரை வாங்கணும்?


