News September 25, 2025
தமிழகத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. முக்கியமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 25, 2025
லடாக் சம்பவம் ஒரு எடுத்துகாட்டு: உமர் அப்துல்லா

மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டதை ஜம்மு & காஷ்மீர் மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதற்கு லடாக் சம்பவம் ஒரு எடுத்துகாட்டு என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாகவும், அமைதியாகவும் தாங்கள் மாநில அந்தஸ்து கேட்டபோது, அதை மறுத்து மத்திய அரசு துரோகம் செய்ததாக அவர் கூறியுள்ளார். யூனியன் பிரதேச அந்தஸ்தை கொண்டாடிய லடாக் மக்கள் தான், தற்போது மாநில அந்தஸ்து வேண்டி போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
திருமணம் வேண்டாம் குழந்தை வேண்டும்: சல்மான் கான்

59 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார். முந்தைய காதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததற்கு தன்னை தான் குறைசொல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு பார்ட்னர் மற்றொருவரை விட ஃபேமஸ் ஆகும் போது இருவருக்கும் இடையில் பிரச்னை தொடங்குவதாகவும், அதனால் இருவரும் ஒன்றாக வளர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News September 25, 2025
வங்கியில் வேலை, ₹93,960 வரை சம்பளம்; அப்ளை பண்ணுங்க

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் கிரெடிட் மேனேஜர் பதவி, வேளாண்மை மேனேஜர் பதவி என மொத்தம் 190 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, CA/CMA/CFA/MBA படித்தவர்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ₹64,820 முதல் ₹93,960 வரை சம்பளம் வழங்கப்படும். 23-35 வயதுக்குட்பட்டவர்கள் <