News September 2, 2025
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: IMD

வடக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD கணித்துள்ளது.
Similar News
News September 2, 2025
இந்திய மக்களை ஆத்திரமூட்டிய இலங்கை அதிபர்: CPI சாடல்

கச்சத்தீவை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என <<17588606>>இலங்கை அதிபர்<<>> தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு இந்தியா – இலங்கை நல்லுறவுக்கு வலுச்சேர்க்காது என CPI மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை இது ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளதாகவும் சாடியுள்ளார். தமிழக மீனவர்கள் குறித்த அவரது அணுகுமுறை தவறாக உள்ளதாகவும் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
News September 2, 2025
₹1,000 மகளிர் உரிமை தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின், தமிழகம் திரும்பியதும் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி புதிய அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியான மகளிருக்கு எப்போது ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அரசு வெளியிட உள்ளதாம். தயாராக இருங்க தாய்மார்களே..!
News September 2, 2025
செமிகண்டக்டர் டிஜிட்டல் டைமண்ட்: PM மோடி

செமிகண்டக்டர் துறையில் இந்திய உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக, PM மோடி <<17589714>>செமிகான் இந்தியா<<>> மாநாட்டில் தெரிவித்துள்ளார். வணிக சந்தையில் எண்ணெய் ’கருப்பு தங்கம்’ என்றால், செமிகண்டக்டர் (Chips) ‘டிஜிட்டல் டைமண்ட்’ என மோடி வர்ணித்துள்ளார். முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்த அவர், விரைவில் ‘மேட் இன் இந்தியா’ பொருட்கள் உலக சந்தையை அலங்கரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.