News March 18, 2024
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாகப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விவரங்களையும் வெளியிட வேண்டும் என ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
Similar News
News November 27, 2025
தித்வா புயல்: பெயருக்கு இதுதான் அர்த்தமா..!

வங்க கடலில் உருவாக உள்ள புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘தித்வா’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. “Detwah Lagoon” என்பது யேமனின் Socotra தீவில் உள்ள குளத்தை குறிக்கிறது. அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறவிருக்கும் இது, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறதாம். இதனால் சென்னை உள்பட வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது.
News November 27, 2025
இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்? HC

‘Dude’ படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்க கோரி இளையராஜா, சென்னை HC-ல் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், 30 வருடங்களுக்கு முன்பு வெளியான பாடல்களை கேட்டு ரசிப்பதால் இளையராஜா எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என HC கேள்வி எழுப்பியது. பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளதாக இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், இம்மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் HC ஒத்திவைத்தது.
News November 27, 2025
₹20,000 சம்பளம், ரயில்வே வேலை.. இன்றே கடைசி!

இந்திய ரயில்வேயில் 3,058 Ticket Clerk, Accounts Clerk காலிப் பணியிடங்கள் உள்ளன. Ticket Clerk பணிக்கு 12-வது பாஸ் செய்திருந்தால் போதும். Accounts Clerk பணிக்கு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ₹20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நவ.27-க்குள் <


