News October 8, 2025
யாரும் எதிர்பார்க்காத புதிய கூட்டணி: டிடிவி தினகரன்

தனது பிரச்சார கூட்டத்தில் தவெக கொடியை காட்டுவது, ஆதரவு போஸ்டர்களை ஒட்டுவது என EPS கூட்டணிக்காக முயற்சிப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். அதனால் தான் மனதில் ஈரம் இல்லாமல் கரூர் துயரத்திற்கு அரசு மீது பழிபோடுவதாகவும், நடுநிலையாக சொன்னால், கரூர் விவகாரத்தில் CM பெருந்தன்மையுடன் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், யாரும் எதிர்பார்க்காத புதிய கூட்டணி அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 8, 2025
BREAKING: ராமதாஸூடன் பேசினார் திருமா

பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு திருமா உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். திவ்யா – இளவரசன் காதல் திருமண விவகாரம் இருசமூகத்தினர் இடையே மோதலாக மாறியதால், திருமாவுக்கும், ராமதாஸூக்கும் மனகசப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் 12 ஆண்டுகளாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை; அரசியல் ரீதியாக எதிரிகளாகவும் மாறினர். இந்நிலையில், இருவரும் பேசியது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News October 8, 2025
ஒரே குடும்பத்தில் பெரும் சோகம்

கர்நாடகாவில் விடுமுறையை கழிக்க டேம் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 6 பேர் நீரில் அடித்து செல்லப்பட்ட சோகம் நிகழ்ந்துள்ளது. துமகுரு டேமுக்குச் சென்ற 15 பேரில், 7 பேர் நீரில் இறங்கியுள்ளனர். அப்போது, திடீரென நீர் வரத்து அதிகரிக்கவே 7 பேரும் அடித்து செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 8, 2025
குழந்தைகளின் செல்போன் Addiction.. பயங்கர டேஞ்சர்!

செல்போன் Addiction மனதளவிலும், உடலளவிலும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் என எச்சரிக்கப்படுகிறது. சென்னையில் வெங்கடேசன் என்ற +1 மாணவன், பள்ளியிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். காலாண்டு விடுமுறையில் அவர் அதிகளவில் மொபைல் பயன்படுத்திய நிலையில், அடிக்கடி பயங்கரமாக தலை வலிப்பதாகவும் கூறியிருக்கிறார். உங்களின் செல்போன் பயன்பாட்டை குறைங்க. இத்தகவலை நண்பர்களுக்கு அதிகளவில் ஷேர் பண்ணுங்க!