News June 28, 2024

நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டம்

image

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு CBI அவரை கைது செய்தது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு இருப்பதை அறிந்து, அவரை சிபிஐ அவசர அவசரமாக கைது செய்ததாக கூறி ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

ரேஷன் அட்டை இல்லாமலே பொருள் வாங்கலாம்.. TRY THIS

image

மக்களே, ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருள்கள் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Mera Ration 2.0 செயலி மூலமாக இது சாத்தியமே. இதற்கு, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். இதில் காட்டும் டிஜிட்டல் ரேஷன் கார்டை வைத்து பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இதை செய்யுங்கள். இந்த முக்கிய தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணலாமே.

News March 2, 2026

கமேனியின் மரணத்திற்கு இந்தியர்கள் ஏன் அழுகிறார்கள்?

image

ஈரான் தலைவர் கமேனி மரணத்துக்கு இந்திய முஸ்லிம்கள் ஏன் அழுகிறார்கள் என்ற கேள்வி எழலாம்? அயதுல்லா அலி கமேனி, ஈரான் உயர் தலைவர் மட்டுமல்ல. Shia clergy எனப்படும் ஷியா முஸ்லிம்களின் மத அறிஞர்களின் வரிசையில் முக்கிய ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவராகவும் அயதுல்லா அலி கமேனி கருதப்பட்டார். இதனால், அவரை தங்களின் அரசியல் & மத வழிகாட்டியாக மதித்த ஷியா முஸ்லிம்கள் வேதனையில் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

News March 2, 2026

BREAKING: திமுக முடிவு.. திருமாவளவன் அதிர்ச்சி

image

திமுக கூட்டணியிலுள்ள தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்க CM ஸ்டாலின் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், ராஜ்யசபா MP பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 6 + 1 சீட் கொடுக்க திமுக சம்மதித்ததாக கூறப்பட்டது. இது, இன்று ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ள விசிகவுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

error: Content is protected !!