News April 1, 2024
மறைந்தும் மர்லின் மன்றோவுக்கு மங்காத மவுசு..!

ஹாலிவுட்டை கலக்கிய நடிகை மர்லின் மன்றோ, 1962ஆம் ஆண்டு தனது 36ஆவது வயதில் மறைந்தார். மறைந்து சுமார் 60 ஆண்டுகளை கடந்த பின்னும் மர்லின் மன்றோ பயன்படுத்திய பொருட்களுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் இன்னமும் மவுசு குறையவில்லை. உச்சபட்சமாக, சமீபத்தில் அவரது தீவிர ரசிகரான அந்தோணி ஜெபின், மர்லின் மன்றோவின் உடல் புதைக்கப்பட்ட சமாதி அருகே உள்ள இடத்தை, ரூ.1 கோடியே 62 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.
Similar News
News January 9, 2026
தேர்தலுக்காக ₹3,000 வழங்கப்படுகிறது: தமிழிசை

பொங்கல் தொகுப்பு வழங்குவதில் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தமிழிசை சாடியுள்ளார். வங்கிக்கணக்கில் நேரடியாக ₹3,000 செலுத்துவதை விடுத்து, வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிக்கு MP, MLA, கவுன்சிலர் வரும்வரை மக்களை நிற்கவைத்து, கஷ்டப்படுத்தி பணத்தை திமுகவினர் கொடுப்பதாக கூறினார். மேலும், இது பொங்கலுக்காக வழங்கப்படும் பணமல்ல, தேர்தலுக்கானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
News January 9, 2026
புதிய கட்சியாக NDA-வில் இணைகிறாரா OPS?

திமுகவிற்கு OPS செல்கிறார் என்ற பேச்சு எழுந்த நிலையில், டெல்லி வந்த EPS-யிடம் OPS-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து அமித்ஷா பேசியுள்ளாராம். மேலும் ஏற்கெனவே அவர் தரப்பில் பதிவு செய்துள்ள Movement for Growth and Rights Party என்ற புதிய கட்சியின் பெயரில் தனிக் கட்சியாகத்தான் OPS இணைகிறார் என்றும், அவர் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 9, 2026
ஒரு தம் விலை ₹72.. காலையிலேயே ஷாக்

கலால் வரி உயர்வு பிப்ரவரி முதல் அமலாகவுள்ள நிலையில், ஒரு சிகரெட் ₹72 வரை விற்கப்பட உள்ளது. இதனால், தற்போதே மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சிகரெட் விலை முன்கூட்டியே அதிகரித்துள்ளது. சிகரெட் விலை பாக்கெட்டுக்கு ₹20-₹25 வரையும், சிகரெட் ஒன்றுக்கு ₹2-₹5 வரையும் அதிகரித்துள்ளது.


