News February 12, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

✍அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை; அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது. ✍வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல; வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. ✍பட்டுக் கையுறைகளுடன் உங்களால் புரட்சி செய்ய முடியாது. ✍நான் யாரையும் நம்புவதில்லை; என்னையே கூட நம்புவதில்லை. ✍இந்த உலகில் வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதைத் தான் வரலாறு காட்டுகிறது – ஜோசப் ஸ்டாலின்.

Similar News

News March 6, 2026

இந்தியாவில் அதிகரிக்கும் வேலையின்மை!

image

இந்தியாவில் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை 3.2% ஆக இருக்கையில், பட்டதாரிகளிடையே இது 4 மடங்கு அதிகமாக (13%) உள்ளது. குறைந்த கல்வி தகுதி உள்ளவர்கள் ஏதேனும் சிறிய வேலையில் சேரும்போது, ​​பட்டதாரிகள் அவர்களுக்கான வேலையை கண்டுபிடிப்பதில் சிரமப்படுகின்றனர். இதற்கு வேலைவாய்ப்பு பற்றாக்குறையே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

News March 6, 2026

USA-விடம் அணு ஆயுதத்தை விட அதிபயங்கர ஏவுகணை

image

உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும் டூம்ஸ்டே ஏவுகணையை USA சோதித்து பார்த்துள்ளது. சில நிமிடங்களிலேயே கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணையால், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை சுமந்து செல்ல முடியுமாம். இந்த சோதனை பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட சோதனை என USA கூறினாலும், ஈரான் போருக்கு இடையே இது நடந்துள்ளதால் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன.

News March 6, 2026

500 விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா!

image

பும்ரா சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 500 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரிஸ் புரூக் விக்கெட்டை கைப்பற்றி அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 235 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 18 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.

error: Content is protected !!