News February 11, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும் ➤ இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான் ➤ ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான். ➤ சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும் – புத்தர்.

Similar News

News February 11, 2025

ரீ-ரிலீசாகும் விஜய்யின் சச்சின்!!

image

விஜய் நடித்த ‘சச்சின்’ படம் வெளியாகி 20 ஆண்டுகளான நிலையில், கோடை கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரீ ரிலீசாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். ஜான் மகேந்திரன் இயக்கத்தில் ஜெனிலியா, வடிவேலு நடித்திருந்த படம் இன்னும் ஃபேன் ஃபேவரிட்டாக இருக்கிறது. இன்னும் ஒரு படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலகும் நிலையில், இது ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸாக அமைந்துள்ளது.

News February 11, 2025

டிராவிட்டுடன் கோலி பேச வேண்டும்: அர்ஜுனா

image

மோசமான ஃபார்மில் இருக்கும் கோலி, தனது பிரச்னையை சரிசெய்ய கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார், டிராவிட் போன்ற லெஜண்ட்களிடம் பேச வேண்டும் என இலங்கை அணியின் ஜாம்பவான் அர்ஜுனா ரணதுங்கா அட்வைஸ் கொடுத்துள்ளார். கோலி போன்ற ஒரு வீரர், இத்தனை ரன்களைச் சேர்த்த பிறகு, அவரது ஓய்வு குறித்து பலரும் பேசுவது தேவையில்லாதது எனவும், அந்த முடிவை அவரிடமே விட்டுவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News February 11, 2025

முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் ₹8 ஆயிரம்

image

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹5,960 உயர்ந்துள்ளது. அதேபோல் முதல்முறையாக 1 கிராம் ₹8 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த மாதம் இதே தேதியில், ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹7,315ஆக இருந்த நிலையில் இன்று ₹8,060ஆகவும், சவரன் ₹58,520ஆக இருந்த நிலையில் இன்று ₹64,480ஆகவும் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!