News September 23, 2025
அழுகிய நிலையில் தாய், மயங்கிய தந்தை.. பூட்டிய மகன்!

டெல்லியிலுள்ள பெற்றோர் நீண்ட நாள்களாக போனுக்கு பதிலளிக்காததால், ஹாங்காங்கில் இருந்த மகள் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். உள்புறமாக பூட்டப்பட்ட வீட்டின் கதவை திறக்க மகன்(50) மறுக்கவே, உறவினர்கள் போலீசை அழைத்தனர். கதவை உடைத்த போது, அழுகிய நிலையில் தாயும்(65), உணவின்றி மோசமான நிலையில் தந்தையும்(70) கிடந்துள்ளனர். மகன் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவர, அபார்ட்மெண்ட் வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News September 23, 2025
‘கைதி 2’ படம் டிராப்?

‘கைதி 2’ மற்றும் ஆமிர்கானுடன் லோகேஷ் கனகராஜ் இணையவிருந்த படங்கள் டிராப் ஆனதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. ‘கைதி 2’ கதையில் லோகேஷ் சில மாற்றங்களை செய்ய இருந்ததாகவும், அதற்கு ஹீரோ தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல், லோகேஷ் ₹75 கோடி சம்பளம் கேட்டதும் படம் கைவிடப்பட்டதற்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
News September 23, 2025
BREAKING: கூட்டணிக்கு வர TTV-க்கு அழைப்பு

டிடிவியை சந்தித்தது பேசியது உண்மைதான் என்று அண்ணாமலை சஸ்பென்ஸை உடைத்துள்ளார். திமுகவை வீழ்த்த, மீண்டும் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதற்கு, நவம்பர் மாதத்திற்கு பிறகு பார்க்கலாம் என்று தினகரன் பதிலளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை; அவரின் நல்ல பதிலுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.
News September 23, 2025
சின்ன பாலம்.. பல உயிர்களுக்கு பெரிய வெற்றி!

சாலையில் குரங்குகளும், அணில்களும் வாகனங்களில் அடிபட்டு, உயிரிழந்து கிடப்பதை பார்த்தாலும், ‘விதி அவ்வளோதான்’ என கடந்து சென்று விடுவோம். ஆனால், விதியை குறைசொல்லாமல், இலங்கையில் இதற்கு தீர்வு கண்டறிந்துள்ளனர். கயிறு பாலங்களை கட்டி, வன விலங்குகள் ரோட்டை கடக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பதிவை பகிர்ந்த தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா சின்ன பாலம் என்றாலும், வன உயிர்களுக்கு பெரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.