News August 14, 2024
சென்னைக்கு விமானத்தில் வந்த குரங்கு

குரங்கு, ஆமை, பாம்புகள் ஆகிய விலங்குகளை விமானத்தில் கொண்டுவந்த நபரை, போலீசார் கைது செய்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த நபர் மீது சந்தேகம் இருந்ததால், அவரது உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர், 22 அரிய வகை விலங்குகளை சட்டவிரோதமாக சென்னைக்கு கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஏன் இந்த விலங்குகளை இங்கு எடுத்துவந்தார் என விசாரணை நடக்கிறது.
Similar News
News December 7, 2025
பெரம்பலூர்: நிதி திரட்டும் நிகழ்வு தொடக்கம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்வை இன்று (07.12.2025) தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி, நம் நாட்டிற்காக பாடுபடும் வீரர்களின் நலனுக்காக அனைவரும் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டுகிறோம் என கேட்டுக்கொண்டார்.
News December 7, 2025
புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்

2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரும் தங்களது ராசிக்கான பலன்களை ஆராயத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிரபல ஜோதிடர் வீனஸ் பாலாஜி வரும் புத்தாண்டில் ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் என கணித்துள்ளார். குறிப்பாக கன்னி ராசியின் 11-வது இடத்தில் குரு உச்சமடைய உள்ளதால் அதீத நன்மை என தெரிவித்துள்ளார். இதில் உங்கள் ராசி உள்ளதா?
News December 7, 2025
வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

பெடிக்யூர் செய்யும் ஆசை இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் என்பதால் தயங்குறீங்களா? அட, வீட்டிலேயே அருமையாக பெடிக்யூர் செய்துகொள்ளலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் மஞ்சள் பொடி, ஷாம்பூ, பேக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் பாதங்களில் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி, பளிச்சென்று காட்சியளிக்கும். பார்லருக்கு சென்று செலவு செய்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


