News October 18, 2025
சற்றுமுன்: விலை தாறுமாறாக மாறியது

தீபாவளியையொட்டி, கோயம்பேடு, தோவாளை, மாட்டுத்தாவணி உள்ளிட்ட மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ₹2,500, கனகாம்பரம் ₹2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை, காக்கரட்டான் ஆகியவை ₹1,500-க்கும், பிச்சி பூ ₹1,200-க்கும் விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பிறகே விலை சரியும் வணிகர்கள் கூறுகின்றனர். தங்கம் மட்டுமல்ல, பூக்கள் கூட வாங்க முடியாது போலயே..!
Similar News
News January 12, 2026
‘பாட்ஷா’வுடன் உடன் நடிக்க ஆசைப்படும் ஹாலிவுட் கிங்!

பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் ஹாலிவுட்டில் நடித்துள்ளனர். ஆனால், ஹாலிவுட் நட்சத்திரங்கள் பாலிவுட் படங்களில் நடிப்பது அரிது! இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், ஷாருக்கானுடன் நடிக்க ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். துபாய் நிகழ்ச்சியில் பேசிய அவர், சல்மான் கான், அமிதாப் பச்சன் ஆகியோருடன் இணைந்து நடிக்க பல ஆண்டுகளாக பேசி வருவதாகவும், ஆனால் எதுவும் கைகூடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News January 12, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3000 ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜன.8-ம் தேதி முதல் இன்று வரை சுமார் 2,04,10,899 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகை ₹6,123.26 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம் ❤️PHOTO❤️

Ex இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு அவரது காதலி சோஃபி ஷைனியுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தனது கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்துள்ள போட்டோவை ஷிகர் தவான் SM-ல் பகிர்ந்துள்ளார். இதற்கு ❤️❤️❤️ பதிவிட்டு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ஏற்கெனவே, ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து 2023-ல் ஷிகர் தவான் விவகாரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


