News September 3, 2025
சற்றுமுன்: உண்மையை போட்டு உடைத்தார் செங்கோட்டையன்

இபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனை முக்கிய தலைவர்கள் சந்தித்து நேற்று சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், செங்கோட்டையன் எதற்கும் பிடிகொடுக்காமல் பதிலளித்து அனுப்பி இருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, இபிஎஸ் தரப்பில் யாரும் பேசினார்களா என்ற கேள்விக்கு, ‘நான் யாரையும் அழைக்கவில்லை, அவர்களாகவே வந்தார்கள்’ என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
Similar News
News September 3, 2025
மதிய உணவு சாப்பிட்டாச்சா… இதை பாருங்க!

மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் ‘Power Nap’ எனப்படும் குட்டித்தூக்கம் போடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறது University college london நடத்திய ஆய்வுமுடிவு. இது ஞாபகசக்தியை மேம்படுத்தி, வேலையில் விழிப்புணர்வுடன் இருக்கவும் உதவுகிறதாம். இந்த குட்டித் தூக்கத்தால், இரவுத் தூக்கம் பாதிக்காதாம். ஆனால், இந்த Power Nap, 15-20 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இப்பவே, ஆபீஸ் டேபிளில் சாயத் தோணுதா?
News September 3, 2025
EPSக்கு எதிராக அதிருப்தி குரல்கள்

EPS உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், பவானி MLA பண்ணாரி, தம்பி சுப்பிரமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சென்றனர். கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அதிருப்தியில் இருந்த முன்னாள் MP சத்தியபாமாவும், செங்கோட்டையனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். EPS மீது அதிருப்தியில் இருக்கும் வேறு சிலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News September 3, 2025
காய்கறிகளை இப்படி சேமித்தால் சீக்கிரம் கெடாது

மழைக்காலத்தில் வாங்கி வைத்த காய்கறிகள் சீக்கிரமாக கெட்டுவிடும் என்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதனால் உணவு பொருள் வீணாவதோடு, நமது பணமும் விரயமாகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்திலும் காய்கறிகள் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் Fresh-ஆக இருக்கும். Try பண்ணி பாருங்க. SHARE.