News December 21, 2024
இன்னும் சிறிது நேரத்தில் வானில் நிகழும் அதிசயம்

வானில் நிகழும் அதிசயத்தின் காரணமாக, இன்றைய இரவு ஒரு நீண்ட இரவாக இருக்கும். சூரியனை சுற்றிவரும் பூமியின் சுழற்சி காரணமாக, சுற்றுப்பாதையின் தூரம் 23.5 டிகிரி அதிகரிக்கிறது. இதனால், 16 மணிநேரத்திற்கு இரவு நீடிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இன்று காலை 7.10 மணிக்கு சூரியன் உதித்த நிலையில், மாலை 5.29 மணிக்கே மறைகிறது. இதனை Winter Solstice என்கிறார்கள். நீங்களும் experience பண்ணுங்க…
Similar News
News March 10, 2026
லாக்டவுன் போல மாறும் சூழல்..

போரினால் உலகளவில் கச்சா எண்ணெய், கேஸ் & பெட்ரோலிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் ஹோட்டல்கள் மூடப்படுகின்றன, விடுதிகளில் மெனுக்கள் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக நிறுவனங்கள் WFH ஆப்ஷனையும், பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளையும் கொண்டுவரலாம். ஏற்கெனவே பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் WFH நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
News March 10, 2026
கர்ப்பிணிகளே, இதனால் உங்க குழந்தைக்கு ஆபத்து!

உண்ணும் உணவு, தண்ணீர் வழியாக தினம் தினம் மனிதனின் உடலில் லட்சக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கிறது. இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்த வரை அனைவரும் (குறிப்பாக கர்ப்பிணிகள்) பிளாஸ்டிக் பொருள்களை தவிருங்கள். இல்லையென்றால் அவை உங்கள் ரத்தத்தில் கலந்து தாய்ப்பால் வழியாக உங்கள் குழந்தையின் உடலுக்குள் செல்லும். அடுத்த தலைமுறையை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 10, 2026
அட்டைப் பெட்டியில் இறந்த குழந்தையை சுமந்த தந்தை!

ஜார்க்கண்டில் குழந்தை இறந்து பிறந்த துக்கத்தில் தவித்த தந்தைக்கு, குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காதது மேலும் துயரில் ஆழ்த்தியுள்ளது. கண்ணீரிலும் வேதனையிலும் குழந்தையின் உடலை Card-Board பெட்டியில் வைத்து, ஆட்டோவில் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். பெரும் வளர்ச்சியை நாடு கண்டுள்ளதாக பெருமை பேசும் நிலையில், இன்னும் பலர் அடிப்படை வசதி கூட கிடைக்காமல் தவிப்பது வேதனையே!


