News May 26, 2024
வானில் நடைபெறவிருக்கும் அதிசயம்

ஜூன் 3ஆம் தேதி மற்றும் ஜூன் 4ஆம் தேதிக்கு இடையே வானில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் அதிசயம் நிகழவுள்ளது. வெள்ளிக் கோளைத் தவிர மற்ற அனைத்தையும் ஒரே நேர் கோட்டில் வானில் பார்க்கலாம். 6 கோள்கள் ஒரே நேரத்தில் வானில் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவை ஒரே நேர் கோட்டில் தோன்றுவது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இவற்றைப் பார்ப்பதற்கு தொலைநோக்கி அவசியமாகும்.
Similar News
News March 11, 2026
உலக சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(11.03.2026) தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 118(₹10,844) உயர்ந்து $5,214 ஆக மாறியுள்ளது. மேலும், வெள்ளி 1 அவுன்ஸ் $5 உயர்ந்து $88-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம்மூர் சந்தையில் <<19342889>>நேற்று சவரனுக்கு ₹800<<>> உயர்ந்த நிலையில், இன்றும் பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது.
News March 11, 2026
உடனே நடவடிக்கை: ஐகோர்ட் வார்னிங்

தமிழகத்தில் அரசு உத்தரவுக்கு விரோதமாக ஆர்டர்லி நடைமுறை பின்பற்றுவதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி முறை ஒழிக்கப்படுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், இதை அமல்படுத்தவில்லை என்றால் அதிகாரிகள் மீது பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
News March 11, 2026
6 வருடங்களுக்கு முன்.. இன்று என்ன நாள் தெரியுமா?

2020-ல் இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.


