News March 17, 2024
வாலுடன் பிறந்த அதிசய குழந்தை

சீனாவில் 10 செ.மீ. வாலுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது. கயானாவில் கடந்த ஆண்டு இதேபோல் பிறந்த குழந்தைக்கு, அறுவை சிகிச்சை மூலம் வால் அகற்றப்பட்டது. அதேபோல், சீனாவில் தற்போது ஆண் குழந்தை வாலுடன் பிறந்துள்ளது. Tethered spinal cord எனும் மருத்துவ நிலையே இதற்கு காரணமென கூறப்படும் நிலையில், வாலை அகற்றும்படி பெற்றோர் விடுத்த கோரிக்கையை மருத்துவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
Similar News
News November 20, 2025
வரலாற்றில் இன்று

1750 – மைசூர் பேரரசர் திப்பு சுல்தான் பிறந்த தினம்.
1910 – புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் மறைந்த தினம்.
1950 – இசையமைப்பாளர் தேவா பிறந்த தினம்.
1959 – குழந்தைகள் உரிமை சாசனம் ஐ. நா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1980 – நடிகை ஷாலினி பிறந்தநாள்.
1985 – மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 வெளியானது.
News November 20, 2025
விமர்சனங்களுக்கு ராம்சரணின் மனைவி பதிலடி

தான் கூறிய கருமுட்டை சேமிப்பு, நிதி சுதந்திரம் <<18335938>>தொடர்பான கருத்துகள்<<>> SM-ல் ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பியுள்ளதாக உபாசனா ராம்சரண் தெரிவித்துள்ளார். அவரது கருத்து கருமுட்டை சேமிப்பு சென்டர்களுக்கு விளம்பரம் செய்யும் வகையில் உள்ளதாக பலரும் சாடியிருந்தனர். இதற்கு FACT CHECK பதிவிட்டு விளக்கமளித்துள்ள அவர், தன்னை பொறுத்தவரை திருமணமும், கரியரும் நிறைவான வாழ்க்கையின் சரிசமமான பகுதிகள் என்று கூறியுள்ளார்.
News November 20, 2025
NATIONAL ROUNDUP: ஹாஸ்பிடல் அலட்சியத்தால் குழந்தை பலி

*கொல்கத்தாவில் போலீசார் என சொல்லி மூதாட்டியிடம் ₹78 லட்சத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். *ராஜஸ்தானில் ஆசிரியரின் துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டான். *லக்னோவில் தனியார் பஸ் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். *பெங்களூரில் அரசு ஹாஸ்பிடலின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


