News August 28, 2025

பாகிஸ்தானுக்கு அல்ல சீனாவுக்கான செய்தி

image

இந்தியா சமீபத்தில் அக்னி -5 ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது. ராக்கெட் படையை உருவாக்க உள்ளதாக பாக்., அறிவித்த சில நாள்களில் இதை பரிசோதித்ததால், இது அந்நாட்டிற்கான செய்தி என கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இது சீனாவிற்கு சொல்லப்பட்ட செய்தி. மணிக்கு 30,000 கி.மீ., வேகத்தில் 5,000 கி.மீ., தூரம் பயணித்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது அக்னி -5. இதன்மூலம் சீனாவின் வடக்கு பகுதிகளை எளிதாக தாக்கலாம்.

Similar News

News August 29, 2025

பாரதத்தை புரிந்து கொள்ள சமஸ்கிருதம் அவசியம்: RSS

image

இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையான குருகுலக் கல்வி, உலகின் நம்பர் 1 கல்வி மாடலான ஃபின்லாந்தின் கல்வி மாடலை போன்றது என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆகையால், குருகுலக் கல்வியை மாற்றாமல், அதை இன்றைய நவீன கல்வியுடன் இணைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நமது பாரதத்தை புரிந்து கொள்ள சமஸ்கிருதம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 29, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 29, ஆவணி 13 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை

News August 29, 2025

‘ஜனநாயகன்’ 1st சிங்கிள்: பேரே மாஸா இருக்கே ரிலீஸ் எப்போ?

image

‘ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி பட்டாசாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘தளபதி கச்சேரி’ என்ற அந்த பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அனிருத் உருவாக்கி இருக்கிறாராம். அதேபோல் MGR நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால்’ பாடலின் Remix-ம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

error: Content is protected !!