News March 18, 2025
செயற்கை இதயத்துடன் உயிர் வாழும் மனிதர்!

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக செயற்கை இதயத்துடன் 100 நாள் வாழ்ந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். நியூ சவூத்வேல்ஸை சேர்ந்த அந்த நபருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட, சிட்னியில் உள்ள ஹாஸ்பிடலில் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்ட BiVACOR என்ற செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அதனுடன் 100 நாள் வரை அவர் கடந்திருக்கிறார். உலகிலேயே 6 பேருக்கு மட்டுமே இதுவரை செயற்கை இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது.
Similar News
News September 22, 2025
Sports Roundup: ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு தங்கம்

*உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப், 42 கிமீ மாரத்தானில் இந்தியாவின் ஆனந்த் வேல்குமார் தங்கம் வென்றார். *சீனா பேட்மிண்டனில் (பாரா) இந்தியாவின் சுமதி சிவன், சீன வீராங்கனை வீழ்த்தி தங்கம் வென்றார். *உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம். * அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
News September 22, 2025
உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு வருமா? இதை கவனிங்க

உங்களுக்கு நீரிழிவு நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளதை பின்வரும் அறிகுறிகள் வெளிப்படுத்தும்: 1) அடிக்கடி தாகம் & தண்ணீர் குடித்தல் 2) நன்றாக தூங்கியும் எப்போதும் சோர்வாக உணர்வது 3) சிறு சிராய்ப்புகள், காயங்கள் கூட மெதுவாக ஆறும் நிலை 4) பார்வை மங்குதல் (அ) மாற்றம் 5) பாதம் மரத்துப் போதல், அதனால் கூச்ச உணர்வு 6) திடீரென உடல்பருமன் அதிகரிப்பது (அ) எந்த மாற்றமும் செய்யாமலே உடல் எடை குறைதல். SHARE
News September 22, 2025
ஏக்நாத் ஷிண்டேவின் X பக்கத்தில் பாகிஸ்தான் கொடி

சமீபத்தில் திரை, <<17746793>>அரசியல் பிரபலங்களின்<<>> ஷோஷியல் மீடியா, வங்கி கணக்குகள், செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் மகாராஷ்டிராவின் DCM ஏக்நாத் ஷிண்டேவின் X தள கணக்கு ஹேக் செய்யப்படுள்ளது. அவரின் பக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி நாடுகளின் கொடிகளையும் பதிவேற்றியுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கை ஹேக்கர்களிடம் இருந்து மீட்டுள்ளனர்.