News July 10, 2025
தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 10, 2025
ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் தெரியுமா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் யார் என அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. இந்திய அணி இளம் வீரரான ஜெய்ஸ்வால்தான், அந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 12 சிக்சர்களை விளாசினார். இதுவே இந்திய வீரர் ஒருவர் ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் ஆகும்.
News July 10, 2025
உள்நாட்டு பாதுகாப்பில் TN போலீஸ் முன்னிலை: CM

உள்நாட்டு பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு போலீசார் முன்னணி வகிப்பதை மீண்டும் ATS நிலைநாட்டியுள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கர் சித்திக் உட்பட 3 முக்கிய தீவிரவாதிகளை பிடித்த ATS-க்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். <<17015271>>கோவை குண்டு வெடிப்பு<<>> குற்றவாளி சாதிக் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News July 10, 2025
மாலை 6 மணி தலைப்புச் செய்திகள்

✪<<17019849>>மதிமுகவில் மீண்டும்<<>> ஏற்பட்ட பிளவு… வைகோ வைத்த குற்றச்சாட்டு
✪<<17018190>>CM நாற்காலி காலியாக <<>>இல்லை என சித்தராமையா திட்டவட்டம்
✪<<17020090>>விவாகரத்து புரளிக்கு<<>> நயன்தாரா கொடுத்த பதிலடி
✪<<17020693>>3-வது டெஸ்டில் <<>>நிதிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்
✪<<17019270>> <<17019270>>வெயிலுக்கு ஒரு <<>>வாரத்தில் 2,300 பேர் பலி