News May 20, 2024
மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

தென்மேற்கு வங்கக் கடலில் மே 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது வடகிழக்காக நகர்ந்து மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 24ஆம் தேதி வரை தமிழகத்தில் கன அல்லது மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
துரோகிகளை வேரறுக்க ஒன்றுபடுவோம்: சசிகலா

எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க ஒன்றாக இணைவோம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதி கமுதியில் பொதுக்கூட்டம் ஒன்று சசிகலா தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த அரசியல் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News February 19, 2026
அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் எழுப்பும் மகன்

தனது தந்தையின் உயிரைப் பறித்த விமான விபத்து குறித்து CBI விசாரிக்க வேண்டும் என அஜித் பவாரின் மகன் ஜெய் பவார் வலியுறுத்தியுள்ளார். விமான விபத்தில் பெரும் தவறுகள் நடந்திருக்கலாம் என்றும், விமானத்தை இயக்கிய VSR Ventures மீது தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதுகுறித்து CBI விசாரிக்கும்படி <<19171519>>அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார்<<>> மகராஷ்டிரா CM-யிடம் நேற்று மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News February 19, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,160 உயர்ந்தது!

கடந்த 3 நாள்களாக தொடர் சரிவில் இருந்த தங்கம் இன்று(பிப்.19) தாறுமாறாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹270 அதிகரித்து ₹14,500-க்கும், சவரனுக்கு ₹2,160 உயர்ந்து ₹1,16,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதால் இந்திய சந்தையில் கடும் விலை உயர்வை கண்டுள்ளது.


