News April 7, 2025
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 8.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வரை வடமேற்கு திசையில் நகரும் எனவும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மத்திய கடலில் வடக்கு நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது.
Similar News
News December 13, 2025
₹1,000 மகளிர் உரிமை தொகை.. வந்தது மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேருக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிப்பது குறித்து CM ஸ்டாலின் முடிவெடுப்பார் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நிராகரிக்கப்பட்டவர்கள் RDO-க்களிடம் மேல்முறையீடு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 13, 2025
தனுஷுக்கு பிறகு ஸ்ரேயஸ்? மனம் திறந்த மிருணாள்

தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்ட மிருணாள் தாகூர், சமீபகாலமாக கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அவர், ஆரம்பத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் தனக்கு கடினமாக இருந்தது, ஆனால் தற்போது ‘இவ்வளவு தானே’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எந்த விமர்சனமும் என்னை பாதிக்காது என்றும் மிருணாள் கூறியுள்ளார்.
News December 13, 2025
கல்வி உதவித் தொகை.. டிச.15-ம் தேதியே கடைசி!

திறன் படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் டிச.15-க்குள் (திங்கள்கிழமை) <


