News December 5, 2024
சற்று முன்னர் தமிழகத்தில் வெளியானது புஷ்பா 2

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் தமிழகத்தில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள படத்திற்கு DSP இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஆந்திரா, தெலங்கானாவில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Stay tuned with Way2News for full review
Similar News
News December 7, 2025
பிக்பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் ❤️❤️ (PHOTOS)

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜூலிக்கு சத்தமில்லாமல் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது காதலரை அவர் கரம்பிடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், Engagement போட்டோஸை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் மணமகனின் முகம் மறைக்கப்பட்டுள்ளதால் அந்த நபர் யார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்க சொல்லுங்க, அந்த நபர் யாரா இருக்கும்?
News December 7, 2025
வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

டிட்வா புயலால் கடந்த வாரம் வெறிச்சோடி இருந்த சென்னை, கடலூர் மீன் சந்தைகள் இந்த வாரம் களைகட்டியுள்ளன. சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 1 கிலோ வஞ்சிரம் – ₹900 – ₹1,400, கொடுவா ₹700 – ₹800, பால் சுறா – ₹350 – ₹500, சங்கரா, இறால் – ₹400 – ₹500, பாறை, கடமா ₹600 – ₹800, நண்டு ₹500 – ₹600-க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் விலை என்ன?
News December 7, 2025
தேர்தல் பணியை தீவிரப்படுத்திய ECI

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி வரும் வியாழக்கிழமை தொடங்கும் எனவும் தெரிகிறது.


