News February 10, 2025
உங்களுக்கு ஒரு ‘குட்டி ஸ்டோரி’

மழை வேண்டி அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று கிராமத்தினர் முடிவு எடுத்தனர். திட்டமிட்ட நாளில் அனைவரும் ஓரிடத்தில் கூடி, மிக பயபக்தியுடன் கடவுளிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் குடையுடன் அங்கு வந்தான்….இது தானே நம்பிக்கை!
Similar News
News March 16, 2026
OTD:சத்தில் சதம் அடித்த சச்சின்

யாரும் நெருங்க முடியாத சாதனையை சச்சின் படைத்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனைதான் அது. ஆசிய கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக 114 ரன்கள் எடுத்து இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். தற்போது விளையாடி வரும் வீரர்களில், விராட் கோலி (85) மட்டுமே அந்த மைல்கல்லை நெருங்கி இருக்கிறார்.
News March 16, 2026
முகத்தை பளபளப்பாக்கும் பியூட்டி ஃபேஸ் மாஸ்க்!

சருமத்தைப் பாதுகாக்க தக்காளி மிகவும் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கரும்புள்ளிகள், எண்ணெய் பசை உள்ளிட்ட பாதிப்புகளை குறைக்க தக்காளி பேஸ் பேக் உதவுமாம். அதற்கு 2 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும். வாரத்திற்கு 2 (அ) 3 முறை இந்த பேக்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்குமாம்.
News March 16, 2026
அமித்ஷாவும் புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள்: அப்பாவு

அமித்ஷா சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அமித்ஷாவும் புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள் என்றும் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யுடன் பேரம் பேசுவதால்தான் இதுவரை NDA கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.


