News February 2, 2025
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் ₹267க்கு விற்பனை

பாகிஸ்தானில் டீசல் விலை லிட்டருக்கு ₹7யும், பெட்ரோல் லிட்டர் ₹1யும் உயர்ந்துள்ளது. இதனால், அங்கு டீசல் ஒரு லிட்டர் ₹267க்கும், பெட்ரோல் ₹257க்கும் விற்பனையாகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், டிரம்ப் பதவியேற்ற பிறகு USA உதவியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 1, 2026
World War 3.. அன்றே கணித்தாரா பாபா வங்கா?

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். இவர், 2026-ல் 3-ம் உலகப் போர் உருவாகலாம், அதில் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முக்கியத் தொடர்பு இருக்கும் என கணித்திருந்தார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து, மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் இருப்பதால், அவரது கணிப்பு உண்மையாகி வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 1, 2026
காங்கிரஸ் தொகுதிகளில் கைவைக்கும் திமுக?

காங்கிரஸுக்கு 2021-ஐ விட தற்போது குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே 41 தொகுதிகளை காங்., கேட்டுவருகிறது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து கொடுக்கும் முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இம்முறை காங்கிரஸுக்கு 23 தொகுதிகளே கிடைக்கும் என்கின்றனர். இந்நிலையில், காங்கிரஸை திமுக பழிவாங்குகிறதா என கதர் சட்டைகள் கொதிக்கின்றனர்.
News March 1, 2026
முருகனிடம் வேண்டிய போது வருத்தமாக இருந்தது: PM

தமிழக மக்களின் நலனுக்காக திருப்பரங்குன்றம் முருகனிடம் வேண்டிக்கொண்டதாக PM மோடி கூறியுள்ளார். இந்த தரிசனம் ஆன்மிக நிறைவை தந்தபோதும், மனம் வருத்தமடைந்தது என்று பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக்கோரி தற்கொலை செய்துகொண்ட பூரணசந்திரனை நினைத்து வருந்தினேன் என கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் மனிதநேயமற்ற தன்மையே இதற்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


