News October 24, 2025
8 வயது சிறுமிக்கு கடவுள் எழுதிய லெட்டர்!

UK-ல் நாய் வளர்க்க ஆசைப்பட்ட சிறுமி(8) பெற்றோரிடம் முறையிட, அவர்கள் மறுத்து விடுகின்றனர். தனது ஏக்கத்தை, ‘To God, Cloud 9, Heaven’ என்ற முகவரிக்கு சிறுமி லெட்டராக எழுதி அனுப்பினார். 6 மாதம் கழித்து, ‘சரியான நேரத்தில் உன் ஆசை நிறைவேறும், தாமதமாக லெட்டர் போட்டதற்கு மன்னிக்கவும்’ என பதில் லெட்டர் வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் பகிர, அந்த கடவுளை பலரும் தேடி வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
தீபாவளி சோகம்: 30 குழந்தைகள் பார்வை இழப்பு?

தீபாவளியில் கார்பைடு துப்பாக்கி வைத்து கொண்டாடிய 30 குழந்தைகள் <<18082464>>பார்வையை இழக்கும்<<>> அபாயம் உள்ளதாக ம.பி. அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த 30 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 300 பேர் தீவிர கண் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்று 14 குழந்தைகள் பார்வையை இழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
News October 24, 2025
நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டாரா?… CLARITY

நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. அவரது மகள் ஜோவிடாவின் இன்ஸ்டா பதிவுக்கு விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ததே அதற்கு காரணம். தந்தை லிவிங்ஸ்டனுடன் இருக்கும் வீடியோவை ஜோவிடா பதிவிட, ‘உங்க அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என அவர் கேட்டார். இதனால் கடுப்பான ஜோவிடா, நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக அல்லவா நினைத்தேன் என பதிலடி கொடுத்துள்ளார்.
News October 24, 2025
கவின் ஆணவக் கொலை: குற்றப்பத்திரிக்கை தயார்

காதல் விவகாரத்தில் நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில், CBCID போலீசார் குற்றப்பத்திரிக்கையை தயார் செய்துள்ளனர். அடுத்த ஓரிரு நாள்களில் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தையும் போலீஸுமான சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ளனர்.


