News October 8, 2025
நயினாரின் பரப்புரைக்கு அடுக்கடுக்கான நிபந்தனை

நயினார் நாகேந்திரனின் மதுரை பரப்புரைக்கு 15க்கும் அதிகமான நிபந்தனைகளை போலீஸ் விதித்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் வசதி, சாலையின் இருபுறம் பேனர் வைக்க கூடாது, கூட்டத்தில் பெண்களுக்கு தனி இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் இருப்பது அவசியம் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறினால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
Similar News
News October 8, 2025
முன்பதிவு ரயில் டிக்கெட்களில் தேதியை மாற்றலாம்

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களை, வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, 2026 ஜனவரியில் அமலாகும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாற்றப்படும் தேதிக்கான கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்தினால் போதும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது டிக்கெட்டை கேன்சல் செய்து (குறிப்பிட்ட கட்டணம் பிடிக்கப்படும்), புதிதாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
News October 8, 2025
விஜய்காந்த் வீட்டில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். சாலிகிராமத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஸ்டாலின், இபிஎஸ், சீமான், நயினார், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகை கௌதமி, எஸ்.ஏ.சந்திரசேகர், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு இன்று அவரது உடல் தகனம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
News October 8, 2025
CJI மீதான தாக்குதலை பாராட்டிய பாஜக நிர்வாகி

CJI கவாய்யை தாக்க முயன்ற வழக்கறிஞரின் தைரியத்தை பாராட்டுவதாக கர்நாடகாவின் பாஜக நிர்வாகி பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார். வழக்கறிஞரின் செயல் சட்டப்படி குற்றம் என்றாலும், இந்த வயதில் அவருக்கு இப்படி ஒரு துணிச்சல் இருப்பது போற்றத்தக்கதே என தெரிவித்துள்ளார். ஒரு Ex. IPS அதிகாரியாக இருந்துகொண்டு இப்படி ஒரு கருத்தை இவர் தெரிவித்துள்ளது, வெட்கக்கேடானது என காங்., சாடிவருகின்றது.