News June 26, 2024

நாளை இபிஎஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News January 11, 2026

இந்தியாவின் முதல் வீரதீர சாதனையாளர்கள்!

image

இந்தியாவின் முதல் வீரதீர விருதுகள் மற்றும் உயர் பதவிகளால் கௌரவிக்கப்பட்ட வீரர்கள் தங்களின் தன்னலமற்ற தியாகங்களுக்காக, நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளனர். இவர்களின் வீரம் பல தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இந்த மாவீரர்கள் யார், அவர்களுக்கு எதற்கு பெருமைக்குரியவர்கள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

போஸ்ட் ஆபீஸ் மூலம் இனி ஒரே நாளில் பார்சல் கிடைக்கும்..

image

தனியார் கூரியர் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் விதத்திலும், வேகமான பார்சல் சேவை வழங்கும் நோக்கிலும் ‘Speed Post 24’ மற்றும் Speed Post 48 ஆகிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Speed Post 24 என்பது முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் பார்சல் கிடைக்கும். Speed Post 48 என்பது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு 48 மணி நேரத்தில் பார்சல் கிடைக்கும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

image

இலங்கை தமிழரின் உரிமையை பாதுகாக்க உரிய தூதரக நடவடிக்கையை PM மோடி எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில் அவர் இலங்கை அரசு இனப்பிரச்னையை தீர்க்கும் போர்வையில், ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக சாடியுள்ளார். இது ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்துவதால், அரசியல் சுயாட்சிக்கான தமிழரின் நியாயமான எண்ணங்கள் புறக்கணிக்கப்படலாம் என சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!