News March 25, 2025
‘சிந்து சமவெளி’ பட பாணியில் நடந்த பயங்கரம்!

அமலா பால் நடித்த ‘சிந்து சமவெளி’ படத்தில், எப்படி மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே தகாத உறவு இருக்குமோ, அதேபோன்ற சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. அங்குள்ள பஹ்பத் மாவட்டத்தைச் சேர்ந்த வேத்பால் (34) என்பவர், தனது மனைவிக்கும், தந்தை ஈஸ்வருக்கும் இடையே தகாத உறவு இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அப்பாவே தனக்கு துரோகம் செய்ததை தாங்க முடியாமல், நேற்று ஈஸ்வரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் வேத்பால்.
Similar News
News March 29, 2025
IPL: தோனி படைத்த சாதனை

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இதுவரை 236 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 4,699 ரன்களை எடுத்து, சுரேஷ் ரெய்னாவின் (176 போட்டிகளில் 4687 ரன்கள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த பட்டியலில், 2,721 ரன்களுடன் டூப்ளஸிஸ் 3ஆம் இடத்திலும், 2,433 ரன்களுடன் ருதுராஜ் 4ஆம் இடத்திலும், 1,932 ரன்களுடன் அம்பத்தி ராயுடு 5ஆம் இடத்திலும் உள்ளனர்.
News March 29, 2025
தென் மாநிலங்கள் கவனமாக இருக்க வேண்டும்: சந்திரபாபு

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது தென் மாநிலங்களுக்கு ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். எனவே நாம் மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அப்படி இல்லையென்றால் வட இந்தியர்கள் இங்கு அதிகளவு வர நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 1.4%, ஆந்திராவின் பிறப்பு விகிதம் 1.5% என்றவாறு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
உலக சந்தையில் தமிழர்களின் பொருட்கள்: அமைச்சர்

கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை மின் வணிகம் மூலம் உலகச் சந்தைக்கு எடுத்து செல்ல,
₹2 கோடி மதிப்பில் ‘கைவினைப் பொருட்கள் சந்தை இயக்கம்’ செயல்படுத்தப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்த, இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ₹1.30 கோடி மதிப்பில், 10 விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.