News August 5, 2024
வரலாற்று சாதனை படைத்த வாண்டர்சே

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சேவின் அபாரமான பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. 10 ஓவர்களில் 33 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை அவர் சாய்த்தார். இதன் மூலம் ODIஇல், முதல் 6 விக்கெட்களை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
Similar News
News March 15, 2026
கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவு

TN, புதுச்சேரியை போல அண்டை மாநிலமான கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 126 தொகுதிகள் கொண்ட அசாமில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 15, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6 கடைசி நாளாகும். அதற்கு அடுத்த நாள் (ஏப்.7) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளன. ஏப்.9 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். SHARE
News March 15, 2026
மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல்

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29-ம் தேதியும் நடைபெறவுள்ளது. மே.4-ல் வாக்கு எண்ணிக்கை நடக்கும்.


