News February 27, 2025
காயத்திலிருந்து மீண்டு சாதனை படைத்த நாயகன்

சாம்பியன் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆப்கன் வீரர் இப்ராஹிம் ஜாத்ரான் 177 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். ஆனால் கடந்த 6 மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்தார். இதற்கு அறுவை சிகிச்சை செய்து, காயத்திலிருந்து மீண்டு வந்து இன்று விளையாடினார். மேலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புரிந்துள்ளார். உண்மையில் இவர் ஹீரோதானே?
Similar News
News February 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 191
▶குறள்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
▶பொருள்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
News February 27, 2025
செல்வப்பெருந்தகை மீதான புகார் குறித்து கார்த்தி கருத்து

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான புகார் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதை தான் பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்றும், கடந்து செல்லவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் செல்வப்பெருந்தகை மீது பிரியங்கா காந்தியிடம் புகார் கூறியிருந்தனர்.
News February 27, 2025
இறுதிப் போட்டியில் IND Vs AUS மோதும்: டேனியல் கிறிஸ்டியன்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாட அதிக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு முன்னாள் வீரர் டேனியல் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் AUS அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், முன்னணி வீரர்கள் இல்லாமலும் அணி சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். AUS அணியின் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.