News June 5, 2024
10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு பலத்த அடி

10 ஆண்டுகால நாசகார ஆட்சிக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். பண பலம், அதிகார பலம் தேர்தல் வரம்பு மீறல்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி, I.N.D.I.A கூட்டணி வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது என்றும், மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
10-வது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

வரும் மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை TN அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை பயன்படுத்தி <
News March 3, 2026
L வடிவ பாலத்தில் 4 பெரும் குறைபாடுகள்: அன்புமணி

சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் தரமற்றது என்பதை உறுதிபடுத்தும் விதமாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ள<<19180715>> 4 காரணங்களை அன்புமணி அடுக்கியுள்ளார்.<<>> வலுவற்ற இரும்பு கம்பிகள், தரமற்ற சிமெண்ட், சீராக பரப்பப்படாத கான்க்ரீட் கலவை & ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் தூண்கள் என கூறியுள்ளார். பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு TN அரசு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 3, 2026
திமுகவுடன் கூட்டணி.. வெளிப்படையாக அறிவித்தார்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பேசிய செல்வப்பெருந்தகை, திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார். தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக கெடு விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


