News April 6, 2024

ராஜஸ்தான் அணி அபார வெற்றி

image

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய பெங்களூர் அணி, 183 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கோலி சதமடித்தார். இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியும் மிகச் சிறப்பாக ஆடியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அந்த அணியின் பட்லர் சதமடித்தார். 5 பந்துகள் எஞ்சி இருக்கும் நிலையிலேயே அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது.

Similar News

News January 15, 2026

அர்னால்டு CM ஆகியிருப்பார்: கார்த்தி சிதம்பரம்

image

திரைப்படத்தை வைத்து தமிழக அரசியலை நிர்ணயம் செய்யலாம் என நினைத்தால் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு எப்போதோ தமிழ்நாடு CM ஆகியிருப்பார் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்குக்காக தான் படங்களை மக்கள் பார்ப்பார்கள் எனவும், தமிழகத்தில் மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பராசக்தியோ, ஜனநாயகனோ 2 படங்களையும் பார்ப்பதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

இன்று ஜல்லிக்கட்டில் இதை செய்தால் ₹2 லட்சம் பரிசு

image

அவனியாபுரத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு காளையை அடக்கினால் ₹2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தோட்டா’ என்ற அந்த காளையை அடக்கும் காளையருக்கு இந்த பரிசு கிடைக்கும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்க மாநிலத் தலைவர் முடக்கத்தான் மணி இதனை அறிவித்துள்ளார். இதனால், வாடிவாசலில் துள்ளி வரும் காளையை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

News January 15, 2026

சற்றுமுன்: விஜய்யின் அடுத்த மெகா சம்பவம்!

image

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்த விஜய், அடுத்ததாக எந்த பகுதியில் மக்களை சந்திக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், EPS கோட்டையாக கருதப்படும் சேலத்தில்தான் அடுத்த மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் என அம்மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பொங்கல் முடிந்ததும் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!