News April 29, 2024
கொல்கத்தா அணி அபார வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான IPL போட்டியில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. ஈடன் கார்டனில் முதலில் விளையாடிய DC 153/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்தீப் 35 ரன்கள் எடுத்தார். KKR தரப்பில் வருண் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய KKR அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார். DC தரப்பில் அக்ஷர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
Similar News
News August 27, 2025
பொது அறிவு வினா- விடை!

1. அஸ்வின் எந்த ஆண்டு IPL-ல் அறிமுகமானார்?
2. இந்தியாவில் முதல்முறையாக ஆஸ்கார் விருது பெற்றவர் யார்?
3. தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு எவ்வளவு?
4. ஜப்பான் நாட்டின் நாணயத்தின் பெயர்?
5. டைட்டானிக் கப்பல் மூழ்கிய ஆண்டு?
கேள்விகளுக்கு சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 27, 2025
இன்ஜினியரிங்கில் AI கட்டாயம்: அண்ணா பல்கலை

நடப்பு கல்வியாண்டு (2025 – 2026) முதல் அண்ணா பல்கலைக்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளில், BE படிப்புகளில் டேட்டா சயின்ஸ், AI பாடத்திட்டங்கள் நேரடி பயிற்சியுடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கில மொழியுடன் ஜெர்மன், ஜப்பான் (அ) கொரிய மொழிகளில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும். Emotional Intelligence, Positivity ஆகியவற்றை கற்கும் வகையில் உடற்கல்வி பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
தமிழ்நாடு முழுவதும் கட்டுப்பாடு அமல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபாடு செய்ய காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தடையில்லா சான்று பெற்று விநாயகர் சிலையை நிறுவ வேண்டும். பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை நிறுவ கூடாது. சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள், கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.