News March 29, 2024

கொல்கத்தா அணி அபார வெற்றி

image

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. சின்னசாமி மைதானத்தில் முதலில் விளையாடிய RCB அணி 182/6 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கோலி 83 ரன்கள் குவித்தார். பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR அணி 16.5 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 50, நரைன் 47 ரன்கள் எடுத்தனர்.

Similar News

News March 13, 2026

பாகிஸ்தான் வீரரால் SRH அணிக்கு குவியும் எதிர்ப்பு!

image

தி ஹண்ட்ரட் தொடருக்கான ஏலத்தில் <<19367924>>பாக்., வீரர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது<<>> அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. SRL அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு சொந்தமானது. அப்ராரின் ஏலத்தை ஒருபக்கம் சிலர் பாராட்டினாலும், தேசிய உணர்வை அவமதித்ததாக கூறி #ShameOnSRH, #BoycottSunrisers போன்ற ஹேஷ்டேக்குகள் SRH-க்கு எதிராக SM-ல் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 13, 2026

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

image

ஹார்​முஸ் நீரிணையில் நிலவும் ஈரானின் தாக்குதலால், பல எண்ணெய் கப்​பல்​கள் இந்​தியா வரு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்கூறி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்​சங்​கர் மற்றும் <<19367934>>PM மோடி ஈரான் அரசுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை<<>> நடத்தினர். அதன் பலனாக இந்​தி​ய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

News March 13, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 631 ▶குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. ▶பொருள்: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

error: Content is protected !!