News September 10, 2025
மாணவர்களின் காலேஜ் பீசுக்கு உதவும் செம்ம திட்டம்!

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் உயர்கல்விக்காக ஆண்டுக்கு 1 முறை ₹40,000 வரை ஸ்காலர்ஷிப் வழங்குகிறது LIC. 10,12-ம் வகுப்பில் 60% தேர்ச்சி பெற்று அரசு/தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு படித்து முடிக்கும் வரை நிதியுதவி வழங்கப்படும். பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு ₹2,50,000-க்குள் இருக்கும் மாணவர்கள், licindia.in-ல் செப்.22-க்குள் விண்ணப்பியுங்கள். SHARE.
Similar News
News September 10, 2025
அக்டோபரில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) வரும் அக்டோபரில் மேற்கொள்ள ECI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், இந்த மாதத்திற்குள் SIR-க்கான களப்பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பிஹாரில் SIR-ன் போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக கூறி எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடின.
News September 10, 2025
திருமண பந்தத்தில் நுழைந்த 9 ஆண்டு காதல் ❤️

பறந்து போ பட நடிகை கிரேஸ் ஆண்டனியின் 9 ஆண்டு கால காதல், திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளது. இசையமைப்பாளர் ஏபி டாம் சிரியக்கை அவர் நேற்று திருமணம் செய்து கொண்டார். கணவரின் முகம் தெரியாமல் முதலில் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். தற்போது, காதல் கணவருடன் கைகோர்த்தபடி இருக்கும் படங்களை கிரேஸ் பதிவிட்டுள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News September 10, 2025
மாநிறத்தில் இருப்பவர்கள் இந்த கலர் ஆடைகளை தேர்ந்தெடுங்க

மாநிறத்தில் உள்ள ஆண்களே, எந்த நிறத்தில் உடை அணிந்தால் உங்களுக்கு பொறுத்தமாக இருக்கும் என தெரியவில்லையா? கவலைவேண்டாம். உங்களுக்கு, சந்தன நிறம், க்ரே, லைட் பிரவுன், ஹாஃப் வைட், லைட் ப்ளூ, குங்கும நிறம் என இதில் இருக்கும் அத்தனை ஷேடுகளும் ஒத்துப்போகும். இந்த நிறங்களில் சட்டைகளை தேர்வு செய்து அதற்கு ஏற்றார் போல் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் அவ்ளோதான், செம்ம ஸ்டைலிஷாக தோற்றமளிப்பீர்கள். SHARE.