News April 7, 2025
இந்தியாவிற்கு பெரும் ஆபத்து

இமய மலைப்பகுதிகளில் விரைவில் மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படலாம் என்று கணித்திருக்கும் அவர்கள், இந்தியாவிலும் அதைவிட அதிக பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணித்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
அதிகளவில் சைக்கிள் பயன்படுத்தும் நாடுகள்

சில நாடுகளில், பைக்குகள், கார்களை விட அதிகளவில் சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாடுகளில் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர். குறிப்பாக, நெதர்லாந்து நாட்டில், மக்கள்தொகையை விட அதிக சைக்கிள்கள் உள்ளன. இதுபோன்று, எந்தெந்த நாடுகளில் சைக்கிள் பயன்படுத்தும் சதவீதம் அதிகமாக உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 28, 2025
உதயநிதி ஒரு வேங்கை மரம்: துரைமுருகன்

ஸ்டாலினுக்கு பிறகு கட்சியை உதயநிதி நடத்துவாரா என்பதில் பலருக்கு இருந்தது போல் தனக்கும் பயம் இருந்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால் புலிக்கு பிறந்தது பூனைக்குட்டி அல்ல, அது ஒரு வேங்கை மரம், எளிதாக வெட்டி வீசிவிட முடியாது என உதயநிதி நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் திறமை, இளம் குருத்தான உதயநிதிக்கும் உள்ளதாக துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
கன்ஃபூசியஸ் பொன்மொழிகள்

*நல்லதை செய்ய ஆசைப்பட்டாலே போதும், உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.
*உண்மையான அறிவு என்பது, நமக்கு தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே.
*உங்களுக்கு எது விருப்பமில்லையோ, அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.
*ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.
*எல்லாமே அழகு தான், ஆனால் எல்லோர் கண்களும் அதை காண்பதில்லை.


