News March 22, 2025
சூப்பர் ஓவர் விதியில் சூப்பரான மாற்றம்

ஐபிஎல் போட்டி டை ஆனால், ஒருமணி நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர் வேண்டுமானாலும் வீசலாம் என புதிய விதி வந்துள்ளது. போட்டி முடிந்து 10 நிமிடத்திற்குள் முதல் சூப்பர் ஓவர் தொடங்க வேண்டும். அது டை ஆனால் 5 நிமிடத்தில் அடுத்த சூப்பர் ஓவர் வீச வேண்டும் என்பது விதி. கடைசி சூப்பர் ஓவரை நேரத்தை பொறுத்து நடுவர் முடிவு செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 23, 2025
1 மாம்பழம் ரூ.10,000… விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

கஷ்டப்பட்டு விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பதை பார்த்திருப்போம். அதற்கு மாறாக தெலங்கானா விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயி சுமன்பாய், உலகிலேயே விலையுயர்ந்த 10 மியாசாகி வகை மாமரக் கன்றுகளை நட்டுள்ளார். தற்போது, அவை காய்க்கத் தொடங்கியுள்ளன. மியாசாகி மாம்பழம் ஒன்று ரூ.10,000 வரை விலை போகிறதாம். சுமன்பாய் காட்டில் பண மழைதான்!
News March 23, 2025
அஜித் குமாரின் ஆசை இதுதான்…!

ஏப்.10-ல் வெளியாகும் குட் பேட் அக்லி படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகிவரும் நிலையில், அஜித் கூலாக இத்தாலியில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றுள்ள அவர், கார் ரேஸ் குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு அணியின் வீரராக, உரிமையாளராக இருப்பது கௌரவம் என தெரிவித்த அஜித், இன்னும் பல ஆண்டுகள் கார் ரேஸில் ஈடுபட விரும்புவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
News March 23, 2025
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்து அரசியல் கட்சிகளிடம் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.