News August 26, 2025
கூலி படைத்த மகத்தான சாதனை

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கூலி படம் நாளுக்கு நாள் புது சாதனை படைத்து வருகிறது. வசூலில் 500 கோடியை கடந்துவிட்ட கூலி தற்போது Spotify தளத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. படத்தின் ஆல்பம் 100 மில்லியனுக்கும் அதிகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கூலியில் உங்களுக்கு பிடித்த பாடல் எது ? கமெண்ட் பண்ணுங்க…
Similar News
News August 26, 2025
ரேஷன் பொருள்கள் வீடு தேடி வர விண்ணப்பிக்க வேண்டுமா?

மாற்று திறனாளிகள், முதியவர்களுக்கு ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே கொண்டுவரும் திட்டத்தை ஆக.12-ல் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாதத்தின் 2-ம் சனி, ஞாயிறுகளில் ரேஷன் ஊழியர்கள் பொருள்களை கொண்டு வருவார்கள். இதற்கென தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பு நடத்தி பயனாளிகளை தேர்வு செய்கின்றனர். SHARE IT
News August 26, 2025
LCU-ல் இணைந்த மாஸ் ஹீரோ

நடிகர் ரவி மோகன் LCU-வில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் எழுதிய கதையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் ரவி மோகனும் நடிக்கிறாராம். இதை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 3 படங்களிலும் அவருடைய கதாபாத்திரம் இடம்பெறும் என லோகேஷ் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. ரவி மோகனின் கதாபாத்திரத்தை லோகேஷ் மாஸாக வடிவமைத்துள்ளாராம்.
News August 26, 2025
கோடிக்கணக்கில் இழந்த கோலி, தோனி, ரோஹித்

ஆன்லைன் கேமிங் மசோதாவால் பிசிசிஐ மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை இழக்கின்றனர். கோலி, தோனி உட்பட பல வீரர்கள் Dream 11, MPL ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு, விளம்பரங்களில் நடித்து கோடிகளில் வருவாய் ஈட்டி வந்தனர். கேமிங் மசோதா அமலால் கோலி ₹12 கோடியும், ரோஹித் மற்றும் தோனி தலா ₹6 கோடியும், இதர வீரர்கள் தலா ₹1-2 கோடியும் என மொத்தமாக ஆண்டுக்கு ₹150 கோடி இழக்கின்றனர்.