News October 10, 2024
நட்சத்திர துகள் வெடிப்பின் பிரமாண்ட காட்சி

நட்சத்திர துகள்களில் ஏற்பட்ட வியத்தகு வெடிப்புகளின் காட்சி புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நாசாவின் சந்திரா எக்ஸ்ரே, இஸ்ரோவின் ஆஸ்ட்ரோ சாட் ஆகிய தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலமாக புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கருந்துளையை சுற்றியுள்ள நட்சத்திர துகள்களில் ஏற்பட்ட வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
Similar News
News December 14, 2025
சங்கிப் படையே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது: CM

நாட்டிலேயே பாஜகவிற்கு எதிராக Ideological fight செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரே மாநில கட்சி திமுக தான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் தான் அமித்ஷா போன்றவர்களுக்கு எரிச்சலாக உள்ளது என குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த சங்கி படையையே கூட்டிக்கொண்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என சவால் விடுத்துள்ளார். பாஜகவால் வெற்றி பெற முடியாதது தமிழகத்தில் மட்டும் தான் என்றும் கூறியுள்ளார்.
News December 14, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

2004-ல் சுனாமி தாக்கியபோது, சென்னையில் உள்ள ஒருவரது கடையில் 2 கிளிகள் தஞ்சமடைந்துள்ளன. அதன் பசியாற்றிய அந்த கணத்தில் கிளிகளுக்கும் அவருக்கும் இடையேயான காதல் தொடங்கியுள்ளது. அதன் முடிவு, தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிக்கும் உன்னத மனிதராக உருவெடுத்துள்ளார் அந்த <<18542461>>’மக்கள் நாயகன்’ ஜோசப் சேகர்<<>>. வாயில்லா ஜீவன்களின் பசியை போக்கிய அந்த பறவை மனிதரின் உயிரை புற்றுநோய் குடித்தது பெரும் சோகம். RIP
News December 14, 2025
டாஸ்மாக்: மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை டாஸ்மாக் கடைகளில் MRP விலையில் மது விற்பனை செய்யும் திட்டம் அறிமுகமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் QR CODE உருவாக்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.


