News November 17, 2024
மிடில் கிளாஸ்க்கு நல்ல காலம்? நிதியமைச்சர் ரிப்ளை

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், மிடில் கிளாஸ் மக்களின் சுமையை குறைக்க, நிவாரணத் திட்டங்களை அறிவிக்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு X-ல் பயனர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு மோடியின் அரசு மக்கள் குரலுக்கு செவி சாய்க்கும் எனவும், உங்களின் கோரிக்கை அங்கீகரிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

நாடு முழுவதும் ஏப்ரலில் 3 மாதங்களுக்கான ரேஷன் பொருள்கள் ஒரே தவணையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே, ஜூன் மாதங்களுக்கான பொருள்களை அடுத்த மாதமே பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் மக்கள் சிரமப்படுவதை தவிர்க்கவும், உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளதாம். SHARE IT
News March 22, 2026
கரூர் ஃபார்முலாவில் திமுக? செந்தில் பாலாஜி

கரூரில் வாக்காளர்களை அடைத்துவைக்க <<19438297>>மனிதப்பட்டிகளை<<>> திமுக தயார் செய்வதாக அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் புகாரளித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்குமான பூத் கமிட்டி அலுவலகங்கள் தான் அவை என்றும், அதற்குரிய அனுமதியை முறையாக திமுக பெற்றுள்ளதாகவும் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே அதிமுகவினர் ஆளும்கட்சி மீது வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
News March 22, 2026
கரூரில் அதிமுக 40,000 ஓட்டுகள் கூட வாங்காது: செந்தில் பாலாஜி

கரூரில் அதிமுக அபார வெற்றி பெறும் என EX மினிஸ்டர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அதற்கு, கரூரில் இருக்கிற 4 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடையும் என்று செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். தற்போதைய கள நிலவரப்படி, கரூரில் அதிமுக 40 ஆயிரம் வாக்குகளை தாண்டாது எனக்கூறிய அவர், தங்களை (திமுக) போன்று செயல்பட முடியாததை மறைப்பதற்காக தேர்தல் பரப்புரை தொடர்பாக புகார் அளிக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.


