News September 14, 2024
UPI பயனர்களுக்கு ஓர் நற்செய்தி

ஒரு குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைக்கு ஒரே நேரத்தில் ₹5 லட்சம் வரை பணம் செலுத்தும் வசதி நாளை (செப்.15) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. நிதிக் கொள்கை மறுஆய்வில் RBI எடுத்த இம்முடிவை அடுத்து, நாட்டில் UPI செயல்பாடுகளை நிர்வகிக்கும் NPCI பரிவர்த்தனை வரம்புகளை அதிகரித்துள்ளது. IT வரி, மருத்துவம் & கல்வி கட்டணங்கள், IPO, அரசுப் பத்திரங்கள் போன்றவற்றுக்கு UPI மூலம் இனி ₹5 லட்சம் வரை
செலுத்த முடியும்.
Similar News
News November 25, 2025
SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களா? திருமா

SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் நீக்கப்பட்டுள்ள 43 லட்சம் பேரும், ஏழை, தலித்துக்கள், இஸ்லாமியர்கள் என இந்நாட்டின் குடிமக்களே என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழைகளின் ஆயுதமான வாக்குரிமையை பறிக்கவே மத்திய பாஜக அரசு திட்டமிட்டு SIR-ஐ செயல்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 25, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று கிடுகிடுவென உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹93,760-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 25, 2025
தவெகவில் இணைகிறாரா அதிமுக EX எம்பி?

அதிமுக EX MP கே.சி.பழனிசாமியுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், EPS-ஐ தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். 1984-ல் MGR-ன் ஆட்சியில் MLA-வாக(காங்கேயம் தொகுதி) இருந்த இவருக்கு இன்றளவும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதனால், அவரை கட்சியில் இணைக்க தவெக தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.


